AMAZON.IN.BOOKS/BOOKLOVERS 087-21

Thursday, April 2, 2026

RAMAYANA- EASY ONE








MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
தசரத மன்னன் மகனாய் உதித்து தாடகை என்னும் அரக்கியை வதைத்து சகட சுபாகுவைக் களத்தினில் மடக்கி மாரீசனின் கர்வம் அடக்கி கௌசிக தேசிகனை காத்தவனே அகலிகை சாபம் அதை தீர்த்தவனே ஜனகனின் சிவதனுசை உடைத்தவனே சீதையை மணந்தவனே (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 2. தந்தையின் சொல்லை மந்திரம் என்று ஜானகி உடனே கானகம் சென்று தம்பி பரதனுக்கு பாதுகை தந்து தந்திர மானைத் தொடர்வினில் போக முனிவனைப் போல வந்து ராவணன் சீதையை அபகரிக்க ஜடாயு திசைதனை எடுத்துச் சொல்ல சீதையை தேடி சென்றவனே (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 3. தொண்டனாக்கினாய் அஞ்சநேயனை தோழனாக சுக்ரீவனை ஏற்றாய் மறைந்து நின்று வாலியைக் கொன்றாய் தாரையின் பூத சரித்திரம் சொன்னாய் அரசனாக செய்தாய் சுக்ரீவனை இளவரசாக்கி வைத்தாய் அங்கதனை ஹனுமனை இலங்கைக்கு அனுப்பி சீதையின் நிலை அறிந்தாய் (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா) 4. வானரப் படையுடன் பாலம் அமைத்து விபீஷணுக்கு அபயம் கொடுத்து கோடி அரக்கர்களை கொன்று குவித்து கோதண்டத்தை கையில் எடுத்து தசமுகனின் உயிரை ஒழித்து திசையெல்லாம் தீர ஒலி முழங்க அரும்புகழ் சீதையுடன் அயோத்தியா திரும்பிய ஜெய ராமா (ஸ்ரீ ராம ராம ஜெய ராஜா ராம ராம ஜெய சீதா)
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

No comments:

Post a Comment

ELECTRIC COOKER

Good electric cookers in India generally cost between ₹2,000 and ₹10,000 , depending on whether you choose a basic rice cooker or a multi-fu...